2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

பங்குனி உத்தரத் திருவிழா

Kogilavani   / 2021 மார்ச் 24 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.இராஜேந்திரன்

புஸ்ஸல்லாவை நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் பங்குனி உத்திர அலங்கார உற்சவம், நாளை மறுதினம் (26) ஆரம்பமாகவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 7  மணிக்கு விநாயகர்  வழிபாடு புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி என்பன இடம்பெற்று காப்புக் கட்டுதல் இடம்பெறும். 

மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல் இடம்பெறும்.

27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம், தீபாரதனை, காவடி பூஜையுடன் மகேஸ்வர பூஜையும் இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, பங்குனி உத்தர உபயகாரர் உபயம், வசந்த மண்டபப் பூஜை, சுவாமி உள்வீதி வலம்வருதல் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.

28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பாற்குட பவனி, வருஷாபிஷேகம், அஷ்டோத்திர 108 சங்காபிஷேகம், தீபாராதனை என்பன இடம்பெற்று மகேஸ்வர பூஜை இடம்பெரும்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, வசந்த மண்டபப் பூஜை, திருப்பொன்னூஞ்சல், சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்று பிரசாதம் வழங்கப்படும். 

29ஆம் திகதி மாலை இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .