2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

விஷேட வழிபாடுகள்...

Editorial   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு விழாவை (ஒக்டோபர் 10) முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் திங்கள்கிழமை (27) மாலை ஆரம்பமாகின.

அதற்கமைய புனித தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகை (புனித தந்ததாது பாதுகாப்படும் தலம்) வளாகத்தில் புத்தர் பூஜை, கொடி-ஆசிர்வாதம் என்பவற்றோடு, பிக்குகளுக்கு “கிலன்பஸ” வழங்குதல் மற்றும் புத்த பெருமான் மற்றும் அவரது சீடர்களின் உயிர்கள் உள்ளதென நம்பப்படும் புனித நினைவுச் சின்னங்களான 'ஷேரேரிகா', 'பரிபோகிகா' 'உத்தேசிகா' என்பவைக்கான ஆராதனைகளும் இடம்பெற்றன.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் 23 ஆவது இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைகளுக்கமைய குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வின் போது, இராணுவ கொடிக்கு ஆசி வேண்டி பிராத்தனைகள் இடம்பெற்றன.

புனித வளாகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 'கிலன்பச' பூஜை பிரசாதங்களுக்கு மத்தியில் புனித உள் அறைக்கு மரியாதை செலுத்தியதோடு, இராணுவத்தில் உள்ள அனைவரினதும் சார்பாக தளபதியவர்களால் , தியவடன நிலமே அலுவலகத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்காக ஒரு தொகை நன்கொடை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் தொடர்ச்சியாக இஸ்லாம் கிறிஸ்தவம் இந்து மத ஆராதணைகள் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .