2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஆலய வருடாந்த அலங்கார உற்சவ…

Editorial   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பன்விலை மடுல்கலை பிரதேச மாவுசா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது.14.09.2022 புதனன்று விநாயகர் வழிபாட்டோடு ஆரம்பமான உற்சவத்தில் 15.09.2022 வியாழனன்று கொடியேற்றமும் சங்காபிஷேகமும் கரகம் பாலித்தலும் இடம்பெற்றன.

17ஆம் திகதி திருவேட்டைத் திருவிழா நிகழ்வும் 18 ஆம் திகதியன்று முத்து முத்தேர் பவனியும் நடைபெற்றது. அம்மனுக்கு மாவிளக்குப் பூசை நடந்தேறியது. நாளை (21) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அத்துடன், இந்து இளைஞர் மன்றத்தினரின் பூங்காவனத் திருவிழாவும் வெள்ளிக்கிழமையன்று வைரவர் மடையும் நிகழ உற்சவம் நிறைவடைகிறது.  (படங்களும் தகவல்களும்: மெய்யன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .