2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் 250ஆவது வருட நிறைவு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


கற்பிட்டி, தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தில் 250ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக நிறைவு பெற்றது.

கடந்த 1762ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் கடந்த 2011ஆம் ஆண்டுடன் 250 வருடங்களை பூர்த்தி செய்தது. அதனைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட இறுதிநாள் நிகழ்வில் புத்தளம், நீர்கொழும்பு, வென்னப்புவ, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 6 இலட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 7 மணி முதல் ஆரம்பித்த விஷேட ஆராதனைகள் காலை 10 மணியுடன் நிறைவு பெற்றன. அத்துடன் கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் கார்டினார் ரஞ்சித் ஆண்டகையினால் இறைவனுக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X