2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நீர்கொழும்பு புனித பீற்றர் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா

Suganthini Ratnam   / 2014 ஜூன் 29 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


 நீர்கொழும்பு புனித பீற்றர் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு ஜுப்லி விழாவும் புனித பேதுருவானவரின் திருவிழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

நீர்கொழும்பு புனித பீற்றர் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டு 150 ஆவது ஆண்டு நிறைவும்  புனித பேதுருவானவரின் திருவிழாவும்  நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் மேதகு மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றதோடு  நீர்கொழும்பு குரு முதல்வர் அருட் தந்தை பெட்ரிக் பெரேரா உட்பட கத்தோலிக்க மதத் தலைவர்கள் பலர்   கலந்து கொண்டனர்.

உலகலாவிய ரீதியில் புனித பேதுருவானவரின் பெருவிழா  இன்று கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .