2025 மே 23, வெள்ளிக்கிழமை

செல்வச்சந்நிதி ஆலய உற்சவம் இன்று ஆரம்பித்தது

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆலய முறைப்படி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 9.10 மணியளவில் விஷேட பூசைகள் அபிசேகம் என்பன இடம்பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட திருவிழா ஆரம்பமாகியது.

ஆலயத்தில் சந்ததி வழிவந்த பூசகர்களே இங்கு பூசைகளை நடத்துவது வழமை. ஆகம முறைப்படி மந்திர உச்சாடனங்கள் எதுவும் இன்றி வாய்கட்டியே இங்கு பூசைகள் இடம்பெறுவது சிறப்பான ஒரு விடயமாகும்.

ஆலயத் திருவிழாவையொட்டி இங்குள்ள சந்நிதியான் ஆசிரமத்தில் ஆன்மீக நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்நிதியான் ஆசிரம சைவகலை பண்பாட்டுப் பேரவை இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்சேவை மற்றும் தனியார் பஸ் சேவை என்பன ஆலயம் வரை விஷேடமாக இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X