2025 மே 23, வெள்ளிக்கிழமை

மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.ஜெனி)

மன்னார், மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று வருகிறது..

கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, திருப்பலிகள் தொடர்ந்து 9 தினங்களாக இடம்பெற்று வந்தன..

இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையின் தலைமையில் மறை மாவட்ட ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு மடுத்திருத்தலம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 1200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மடுத்திருத்தல உற்சவத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் வரை கலந்துகொண்டிருப்பதாக தெரியவருகிறது. தற்பொழுது மடுமாதாவின் திருச்சொருப பவணி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X