2025 மே 22, வியாழக்கிழமை

செல்வச்சந்நிதியான் இரதோற்சவம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

சரித்திரப் பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்று காலை  சிறப்புற நடந்தேறியது. காலை முதலே குடாநாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் பக்தர்கள், பாற்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி, கற்பூரச்சட்டி, பஜனை கோஷ்டிகள் சகிதம் சந்நிதி ஆலயத்தில் திரளத் தொடங்கினர்.

இதனால் வல்லைப்பகுதி காலையில் இருந்து சன நெரிசலால் திணறியது. பக்தர்களின் நன்மை கருதி விசேட பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தோர் மற்றும் தென்னிலங்கை யாத்திரிகர்களும் பெருமளவில் தேர் உற்சவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .