Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா இன்று வெகுவிமர்சையாக ஆரம்பமானது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் பண்ணப்பட்டு திருக்கதவு திறத்தல் இடம்பெற்றது.
ஐந்து தினங்கள் இடம்பெறும் ஆலய வருடாந்த உற்சவத்தில் நாளை, வாழைக்காய் எழுந்தருளல் பண்ணல் நிகழ்வும் நாளை மறுதினம் திங்கட்கிழமை அம்பாள் ஊர்காவல் திரு உலாவும் இடம்பெறும்.
செவ்வாய்க்கிழமை காலை சக்திபூசையுடன் விசேட அபிசேகம் இடம்பெற்று பிற்பகல் 3.00மணிக்கு நோற்புக்கட்டுதல் இடம்பெற்று கடற்குழிப்பு இடம்பெறும்.
அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை இடம்பெறும் தீமிதிப்பு உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.
இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை 'கடலலையோடு'என்னும் இறுவெட்டு ஆலயத்தில் வெளியிடப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago