2025 மே 22, வியாழக்கிழமை

கோட்டைக்கல்லாறு ஸ்ரீநாகதம்பிரான் ஆலய சப்பர பவணி

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் கோட்டைக்கல்லாறு ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நிகழ்வான சப்பர பவணி நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

வீதியுலா வந்த ஸ்ரீநாகதம்பிரானின் சப்பரப்பவணியில் இடம்பெற்ற கரகாட்டம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

இந்த சப்பர பவணியானது ஆலயத்தை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X