Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 22 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோகித்)
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று புகழ்மிக்க முருகன் ஆலயங்களில் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தேவசேனா சமேதர் ஸ்ரீ சிவசுப்ரமணிய பெருமானுக்கு விசேட அலங்கார பூசைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்தார்.
இதனையடுத்து, ஆலயத்துக்கு வெளிவீதியில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பானை எரிக்கப்பட்டு அது அசுரனை வதம்செய்தததாக கருதப்பட்டு சுவாமி வெற்றிக்களிப்புடன் வெளிவீதி வலம் வந்து ஆலயத்துக்கு வந்தார். இந்நிலையில், ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றன.
இதேவேளை, இந்த கார்த்திகை தீபத்திருநாளை பக்தர்கள் வீடுகளிலும் கொண்டாடினர். தமது வீடுகளுக்கு முன்பாக தீபம் ஏற்றி வீடுகளிலும் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
36 minute ago
43 minute ago