2025 மே 21, புதன்கிழமை

றைகம் முத்துமாரியம்மன் பூங்காவன திருவிழா

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிரிய றைகம் கீழ் பிரிவின் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பூங்காவன திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட திருவிழா நேற்றைய பூங்காவன திருவிழாவுடன் நிறைவடைந்தமை சிறப்பானதாகும்.

காலையில் சிறப்பு பூஜையுடன் ஆரம்பமாகிய பூங்காவன திருவிழா இரவு 11.30 வரை தொடர்ந்தது. மதியத்தில் அடியார்களின் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் முத்துமாரியம்மன் வெளிவீதியுலா வந்து பூங்காவனத்தில் ஊஞ்சலாடிய காட்சி பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

பூங்காவன திருவிழாவை தொடர்ந்து சூரியன் எப்.எம்.இன் அனுசரணையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியும் அதிகாலைவரை தொடர்ந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .