2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலய எண்ணெய்க்காப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( ஸரீபா, ஆர்.அனுருத்தன்)

பிரசித்திபெற்ற திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு நாளை புதன்கிழமையும் இடம்பெறும். கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான   புனராவர்த்தனப் பிரதிஸ்டா நவகுண்ட மஹா கும்பாபிஷேகம்     எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை 8.31 மணி தொடக்கம் 10 மணிக்குள் இடம்றெவுள்ளதுடன் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இன்று தொடக்கம் 3 நாட்கள் அன்னதான நிகழ்வும் இடம்பெறும். சிவஸ்ரீ. சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியை நிகழ்வுகள் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X