Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற - சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் புனராவார்த்தனப் பிரதிஸ்டா நவகுஸ்ட மஹா கும்பாபிஷேகம் இன்று காலை இடம்பெற்றது.
புண்ணிய யாகவாசனம், யாகபூஜை, மஹாபூர்ணாகுதி, அந்தர்பலி, பஹிர்பலி, தீபாராதனை, வேதஸ்தோத்திர, நாக கீத வாத்திய சமர்ப்பணம், யாத்ராதனம், ஸ்தூபிகள் அபிஷேகம், பிரதான மூர்த்தி கும்பங்கள் வீதிப்பிரதட்சணம், ஸ்தூலலிங்க கோபுர அபிஷேகம், சுபமூகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகமம், கோபூஜை, மங்கள தசதர்சனம், எஜமான் அபிஷேகம், ஆச்சர்ய சம்பாவனை, மஹாபிஷேக பூஜையைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் சடங்குகளை பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் தலைமையில் தர்மசாஸ்த்தா குருகுல் அதிபர் சிவப்பிரம்மஸ்ரீ தா.மஹாதேவக் குருக்கல், இந்துமத குருபீடாதிபதி அதிவந்தனிய சிவப்பிரம்ப ஸ்ரீ பரமெஸ்வரா மனோகரக் குரு ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் கிரிகைகள் நடைபெற்றன.
abinath Friday, 16 September 2011 05:39 AM
உங்கள் நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் நன்று.
Reply : 0 0
Kumar Friday, 16 September 2011 06:51 PM
முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க நானும் கடவுளை பிரார்த்திக்கின்றேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
31 minute ago
46 minute ago