Super User / 2012 மார்ச் 12 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவரத்தினம்)
கிறிஸ்தவர்களால் தற்போது தவக்காலம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து குருமன்காடு மாதா ஆலயம் வரை பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த பாத யாத்திரையானது பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொள்ள கொரவப்பத்தான வீதி வழியே சென்று மன்னார் வீதி ஊ10டாக குருமன்காட்டை சென்றடைந்து குருமன்காட்டு மாதா ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்ற பின்னர் நிறைவடைந்தது.
இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை மன்னாரில் இருந்து வவுனியாவில் உள்ள கல்வாரிக்கு பாத யாத்திரை ஆரம்பமாகி வெள்ளிக்கழமை வவனியா கோமரசன்குளத்தில் உள்ள கல்வாரி மலையினை மக்கள் சென்றடையவுள்ளனர்.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago