2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாமாங்கம் அருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 
மட்டக்களப்பு, மாமாங்கம் அருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
 
நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட இவ் ஆலயத்தின் வழிபாடுகள் கடந்த காலங்களில் சிறிய குடிசையில் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் தற்போது ஆகம விதிகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கிராமசாந்தி என்பன இடம்பெற்று கிரியைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.
 
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அடியார்களுக்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நேற்று புதன்கிழமை பிற்பகல் 4.00மணி வரை இடம்பெற்றது.
 
இன்று வியாழக்கிழமை காலை 7.00மணி தொடக்கம் 8.00க்கு இடையில் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு செய்யப்பட்டது.
 
ஆலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் யாவும் பிரதிஸ்டா பிரதமகுரு சபரிதாஸன் பிரம்ம ஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்று வருகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X