2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திவ்விய நற்கருணை பெருவிழா

Kogilavani   / 2012 ஜூன் 25 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

திவ்விய நற்கருணைப் பெருவிழாவும் ஊர்வலமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை, கத்தோலிக்க கிருஸ்தவ சமயப் பிரிவினர் வருடாந்தம் இவ் திவ்விய நற்கருணைப் பெருவிழாவையும்  ஊர்வலத்தையும் நடாத்தி வருகின்றனர்.

திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் புனித அந்தோனியார் ஆலயம், புனித மரியாள் கல்லூரி ஊடாக புனித மரியாள் பேராலயத்தை வந்தடைந்தது.

திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் ஆராதனைகள் நடைபெற்றன.

ஊர்வலத்திலும் ஆராதனைகளிலும் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X