2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரிலோஹித்)

அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

அலங்கரிக்கப்பட்ட யானையின் பவனியுடன் வசந்த மண்டபத்தில் இடம்பெற்ற விசேட பூசையின் தேர் உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சீர்பாத தேவியினால் கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயமானது இலங்கையின் வரலாற்றில் தமிழ் மன்னர்களின் எழுச்சியை காட்டிநிற்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களது இடங்களை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த சிந்தாயாத்திரை பிள்ளையாரால் முறியடிக்கப்பட்டதாக இந்த கிராம மக்கள் நம்புகின்றனர்.\



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X