2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜதுஷன்)

ஆடிப்பூரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, பெரியகல்லாறு, உதயபுரம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி மற்றும் சிறப்பு பூசைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குட பவனி ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தது.

ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்தியான அம்மனின் சொரூபத்துக்கு அபிசேகம் செய்யப்பட்டு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றன.

இதேவேளை, மேல்மருவத்தூர் ஆதிபராசாக்தி சித்தர் பீடம், வாரவழிபாட்டு மன்றம் - ஸ்ரகளுவாஞ்சிகுடி கிளையினால் நடத்தப்பட்ட அன்னை ஆதிபாராசக்தியின் ஆடிப்பூரப் பெருவிழாவை முன்னிட்டான கஞ்சிப் பாத்திர பவனியும் ஆன்மீக நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான கஞ்சிபாத்திர பவனி களுவாஞ்சிக்குடி சக்தி இல்ல ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் ஆலயத்தை சென்றடைந்தது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X