2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

ஆரையம்பதி வடபத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா 5 நாட்கள் சிறப்பாக நடைபெற்றன.

மூலஸ்தானத்திலுள்ள அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்று தேவாதிகள் ஆடிவர அன்னை தீக்குளிக்கு வந்து காவல் பூஜை செய்து ஆலயத்தினை வலம் வந்து தீ மிதிப்பு ஆரம்பமானது.

மனிதனை பீடித்திருக்கும் சகல கருமங்களும் தீயில் பட்டு கருகிவிட இறைவனின் திருப்பாதத்தை அடைவதாக தீ மிதிப்பு வைபவம் பொருள்படுகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X