2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை வில்லூன்றி கந்த சுவாமி கோவில் உற்சவம்

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்ஸவம் இன்று வியாழக்கிழமை காலை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.

இரதோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெறும். தீர்த்தோற்ஸவம் மறுநாள் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்தின் போது மனைவாயவெளி சமுத்திரக் கரையில் இடம்பெறும்.

திருப்பூங்காவன உற்சவம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலையும் தெப்பத் திருவிழா 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையும் இடம்பெறும்.

இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனும் பங்குபற்றினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X