2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பட்டிப்பளை அருள்மிகு புளியடி வைரவர் ஆலய வருடாந்த உற்சவம்

Super User   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தில் பிரசித்திபெற்ற பட்டிப்பளை அருள்மிகு புளியடி வைரவர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ பெருவிழா நேற்று சனிக்கிழமை நிறைவுபெற்றது. கடந்த திங்கட்கிழமை காலை கிரியைகள் ஆரம்பமாகி நள்ளிரவு திருக்கும்பம் வைத்தலுடன் உற்சவம் கோலாகலமாக ஆரம்பமானது.

கடந்த ஐந்து தினங்களாக இடம்பெற்ற ஆலயத்தின் இந்த உற்சவத்தில் புதன்கிழமை ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மகர தோரண ஊர்வலம் ஆரம்பமாகி மேளதாளங்களுடன் அடியார்களின் காவடி ஆட்டங்களுடன் ஆலயத்தினை அடைந்தது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு சடங்குகள் கோலாகலமாக இடம்பெற்று வந்ததுடன் நேற்று விசேட சடங்குடன் பலிகரண பூசை சிறப்பாக இடம்பெற்று வைரவ சுவாமியின் ஊர்வலமும் இடம்பெற்றது.

இந்த ஊர்வலத்தின் போது அடியார்கள் வீதிகளில் நீர் தெளித்து நிறைகுடங்களை வைத்து வைரவ சுவாமியை வரவேற்றதுடன் ஆசிர்வாதத்தினையும் பெற்றனர். இதனையடுத்து நேற்று சனிக்கிழமை அம்மனுக்கு சர்க்கரை அமுது கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்று உற்சவம் இனிது நிறைவுபெற்றது. இந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X