2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பாற்குடப் பவனி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (ஹனீக் அஹமட்)


துறைநீலாவணை ஸ்ரீதில்லையம்பலப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த விநாயக சதுர்த்தி அலங்கார உற்சவ பெருவிழாவின் ஐந்தாம் நாள் சிறப்பு நிகழ்வாக இன்று ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனி நடைபெற்றது.

ஸ்ரீசக்தி விநாயகர் ஆலயத்திலிருந்த பூசைகளுடன் ஆரம்பமான பாற்குட பவனி ஸ்ரீதில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானின் திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை காலை - கொடியேற்றத்துடன் ஆரம்பமான அலங்கார உற்சவமானது நாளைமறுதினம் செவ்வாய்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X