2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய கொடியேற்றம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

இராமாயண காலத்தில் இராவணனால் தரிசிக்கப்பட்ட சிவ ஆலயங்களில் ஒன்றாக கூறப்படுவதும், இலங்கையில் அன்னியர் ஆட்சிக் காலத்தில் கல் நந்தி புல்லுண்டு தனுப்போட்டு சாணமிட்டு வெள்ளையர்களை புறமுதுகு காட்டி ஓட வைத்ததுமான கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரப் பெருமான் ஆலய மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கள் கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் சிறப்பு வாய்ந்த தேரோட்டப் பெருவிழா எதிர்வரும் செப்டொம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் வேட்டைத் திருவிழா மாலை 7.00மணிக்கு முனைக்காடு வைரவர் ஆலய முன்றலில் இடம்பெறும்.

இன்று 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் ஸ்நபனாபிசேகம் தொடர்ந்து பூசை, யாக பூசை, தம்ப பூசை, திக்குப்பலி, வசந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி வெளிவீதி உலாவருதல் காலை மாலை நடைபெறும். தொடர்ந்து தேசத்து குடிமக்களின் திருவிழாக்கள் இடம்பெறும்.

24ஆம் திகதி பொன்னாச்சி குடித் திருவிழாவும், 25 ஆம் திகதி வேடகுடித் திருவிழாவும், 26ஆம் திகதி சஷ;டி குடித் திருவிழாவும், 27ஆம் திகதி பெத்தான் குடித் திருவிழாவும், 28ஆம் திகதி கோப்பி குடித் திருவிழாவும், 29ஆம் திகதி கச்சிலா குடித் திருவிழாவும், 30ஆம் திகதி படையாட்சிகுடித் திருவிழாவும் 31ஆம் திகதி கலிங்ககுடித் திருவிழாவும், செப்டெம்பர் 01ஆம் திகதி உலகிப்போடிகுடித் திருவிழாவும் இடம்பெறுவதுடன் 02ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 4.00 மணிக்கு தேரோட்டமும் அன்று மாலை 7.00 மணிக்கு திருவேட்டைத் திருவிழாவும் 03ஆம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

திருவிழாக் காலங்களில் கலை பண்பாட்டு இசை நிகழ்வுகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், மட்டக்களப்பு மரபுவழி நாட்டுக்கூத்து என்பன இரவு வேளைகளில் தினமும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை உற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுவதுடன் பிரத்தியேக போக்குவரத்துக்கள், மண்முனை வாவிப் போக்குவரத்து, அம்பிளாந்துறை வாவிப் போக்குவரத்து, தனியார், இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X