2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் ஆலய தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பிரசித்திபெற்ற பஞ்ச ஈஸ்வர தேவஸ்தானங்களில் ஒன்றான சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் தேர்த் திருவிழா இன்று நண்பகல் நடைப்பெற்றது.

இன்று காலை நடைப்பெற்ற வசந்த மண்டப பூஜையினையடுத்து பக்தர்களின் 'அரோகரா' கோஸத்துடன், பஞ்சரதங்களும் தேவஸ்தானத்தினை சுற்றிவர ஆரம்பித்தன.

இன்றைய நிகழ்வில் வட கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் தீர்த்தோற்சவமும் நாளை மறுதினம் காலை பால்குட பவனியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தேர்த் திருவிழா வீடியோ...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X