2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம்

Super User   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கந்தபுராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாகவுள்ள வரலாற்று சிறப்பு மிக்கதும் ஈழத்தின் சின்ன கதிர்காமம் எனவும் போற்றப்படும் மட்டக்களப்பு, மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை பகல் கோலாகலமாக இடம்பெற்றது.

பண்டைய முறையிலான வழிபாட்டு முறைகளுடன் கடந்த 10 தினங்களாக ஆலயத்தின் உற்சவம் இடம்பெற்றது. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக அந்த வரலாறுகளில் தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூசை முறைகளும் பண்டைய முறையில் கதிர்காமத்தினை ஒத்ததாகவே காணப்படுகின்றன.

தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூசைகள் இடம்பெற்றதுடன் ஆலய உள்வீதி வெளி வீதியுலா இடம்பெற்றதுடன் வள்ளியம்மன், தெய்வானையம்மன் ஆலங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு பூசைகளும் இடம்பெற்றுவந்தன.

இன்று காலை ஆலயத்தில் கப்புகனாரால் பேழைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு சுவாமி உள் வீதி வலம் வந்து கிராமத்தின் ஊடாக மட்டக்களப்பு வாவியினை அடைந்து அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டன.

அத்துடன் தீர்த்த உற்சவத்துக்காக பேழையில் இருந்த வேல் எடுக்கப்பட்டு துணியால் போர்த்திய நிலையில் வாவிக்குள் கொண்டுவரப்பட்டு தீர்த்த உற்சவம் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்த தீர்த்த உற்சவத்தினை கண்டுகளிப்பதற்காக உலகம் எல்லாம் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் சிங்கள மக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

இந்த உற்சவத்தினை முன்னிட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெலகெதரவின் தலைமையில் விசேட பாதுகாப்புக்கள் செய்யப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X