2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வர பெருமான் ஆலய மஹோற்சவ தேரோட்டம்

Super User   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார், ஜவிந்திரா)


கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வர பெருமான் ஆலய மஹோற்சவ தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் 14ஆவது திருவிழா நாளாகும். இன்று தேரோட்டத்தையடுத்து திருவேட்டை திருவிழா மாலை 7.00 மணிக்கு முனைக்காடு வைரவர் ஆலய முன்றலில் இடம்பெறுகின்றது.

திருவேட்டைத் திருவிழாவையடுத்து நாளை திங்கட்கிழமை 03 ஆம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது. திருவிழாக் காலங்களில் கலை பண்பாட்டு இசை நிகழ்வுகள் ஆண்மீக  சொற்பொழிவுகள் மட்டக்களப்பு மரபுவழி நாட்டுக்கூத்து என்பன இரவு வேளைகளில் தினமும் இடம்பெற்றன.    


 

   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X