2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலய தேர திருவிழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு படுவான்கரை திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்தேர்திருவிழா கடந்த கடந்த 10 தினங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இந்த 10 தினங்களில்,  வேட்டைத் திருவிழா, மாம்பழத் திருவிழா என்பன கோலாகலமாக இடம்பெற்றதுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சுவாமியின் முத்துச்சப்பர பவனியும் இடம்பெற்றது.

நேற்று காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து, விநாயகர் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வளம் வருதல் இடம்பெற்றது. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X