2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

உப்போடை வயற்கரை விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, வந்தாறுமூலை உப்போடை வயற்கரை விநாயகர் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தோற்சவம் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று புதக்கிழமை கிரான்புல் கட்டு சிவகங்கையில் நடைபெற்றது.

இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்தது.

வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவரும் இப்பிரதேச மக்களின் குறை தீர்க்கும் ஆலயமாக காணப்படும் இவ்வாயலத்தின் தீர்த்தோற்சவத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தின் உற்சவக் கிரியைகளை சிவஸ்ரீ கௌரிநாதன் பண்டரிநாதன் குருக்கள், சிவஸ்ரீ ஜெயம்பலம் குருக்கள் ஆகியோர் மேற்கொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X