2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திருமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கான பாதயாத்திரை மட். மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆ

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

திருகோணமலை, வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கான நடைபவனி மூன்றாவது நாளாக இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கி இந்நடைபவனியை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, இப் பாத யாத்திரையில், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தெரிவான மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, இ.நித்தியானந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாலர்  நா.புவனசுந்தரம், இணைச்செயலாளர் எஸ்.விமலானந்தராசா கிழக்கு இந்து ஒன்றிய பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர பேரவையின் உறுப்பினர்களான கி.ரவீந்திரராசா, சொ.ரதன், ச.ஜெயலவன், சே.நிமல்ராஜ், ந.குகதர்சன், இ.தேவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்பாத யாத்திரை எதிர்வரும்; திங்கட்கிழமை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X