2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வருடாந்த தேர்த் திருவிழா

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், கு.சுரேன்


சுன்னாகம் ஐயனார் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இன்று மிச்சிறப்பாக நடைபெற்றது.  இன்று காலை வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஐயப்பன் பிள்ளையார், சண்டேஸவரர் சகிதம் தேரில் எழுந்தருளி அடியர்களுக்கு அருள்பாலித்தார்.

அத்துடன் காவடிகள், கரகங்கள், தீச்சட்டி, அங்கப்பிரதட்சை என அடியவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தியிருந்தனர். இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த 10 நாள் உற்சவத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு  தேர்த்திருவிழா  நடைபெற்றது. இதன்போது, முத்துமாரியம்மன் சித்திரத்தேரில் பவனி வந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .