2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சதாசகாய அன்னையின் திருவுருவ உலா

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


மாமாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலயத்தின்  வருடாந்த உற்சவத்தைத் தொடர்ந்து சதாசகாய அன்னையின் திருவுருவ உலா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சதாசகாய அன்னையின் திருவுருவம் ஆலயத்தை வந்தடைந்ததும் அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளாரின் தலைமையில்  நற்கருணை வழிபாடும் ஆசியும் இடம்பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட  குரு முதல்வர் அருட்பணி கு.ஓ.டயஸ் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொடியோற்றத்துடன்  ஆரம்பமாகியது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .