2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லைக்கந்தன் ஆலயத்திற்கு பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


யாழ். நல்லூர்க் கந்தன் ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு 3ஆவது வருடமாக வேல் தாங்கிய பாத யாத்திரை வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற  விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கந்தனுடைய வேல் எடுத்துச் செல்லப்படுகின்றது.

நாட்டில் அமைதி வேண்டியும் சாந்தி சமாதானம் வேண்டியும் மேற்கொள்ளப்படும்; பாத யாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் எஸ்.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி சிவகுமாரன், பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பாத யாத்திரை ஏ - 9 வீதி வழியாகச் சென்று எதிர்வரும் 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .