2025 மே 19, திங்கட்கிழமை

இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஏற்பாடு செய்திருந்த இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரை நண்பகல் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தை நேற்று வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை திருக்கோயிலிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை வெருகல் ஆலயத்தை சென்றடையவுள்ளதாக யாத்திரை ஒழுங்கமைப்பு செயலாளர் பா. சந்திரேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்லடி புதுப்பாலம் வழியாக கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை யாத்திரை சென்றடைந்தது.

வெருகல் ஆலய திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06. 09.2013) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24.09.2013 செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X