2025 மே 19, திங்கட்கிழமை

தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்
, மாணிக்கப்போடி சசிக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்றது.

இப்பாத யாத்திiயில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இந்த பாதையாத்திரை இடம்பெற்றது.

வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவின் பிராத்தனை திருப்பலியினைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தணமாதா ஆலயம் வலையிறவுப் பாலம் ஊடாக சென்றது.

இப் பாதயாத்திரையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் உட்பட அருட்தந்iமார் மற்றும் கிறிஸ்தவ வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

விசேட சொரூபமும் இதன்போது கொண்ட செல்லப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான 59வருட ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை 8ஆம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X