2025 மே 19, திங்கட்கிழமை

பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பழமைவாய்ந்த ஆலயங்களின் ஒன்றான அன்னமலை அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார மஹோற்சவ பெருவிழா குருக்கள் விஸ்மப்பிரம்மஸ்ரீ சி.கோணாமலை, விஸ்மப்பிரம்மஸ்ரீ சா.சிவராசா பூசகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி  சுபவேளையில் திருக்கதவு திறந்தலுடன் ஆராம்பமாகிய கிரியாகால நிகழ்வுகள் இறுதி நாளான இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தீமிதிப்புடன் நிறைவுபெற்றது.

பெரும் திரளான பக்தர்கள் தீ மிதிப்பில் ஈடுபட்டனர். அதனை தொடந்து நோத்திக் கடன்களை நிறைவேற்றி தேவதைகளுக்கு மடைப்பலி கொடுக்கப்பட்டதுடன் அம்மனுக்கு பாளை சாற்றுதலும் மற்றும் ஆயுத வழிபாட்டுடனான மங்கள வாழ்த்துப்பாடலுடன் அம்மனின் அலங்கார உற்சவகாலம் நிறைவுபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X