2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிரான் சித்திவிநாயகர் ஆலய இராஜ கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-க.ருத்திரன்


மட்டக்களப்பு, கிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த இராஜ கோபுரமானது  9 தளங்களையும் 108 அடி உயரத்தினையும் கொண்டு அனைத்து அம்சங்களும் அமையப்பெற்றதாக அமைக்கப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .