2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன். வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்


வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வசந்த மண்டப பூசையினை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா சத்தத்தின் மத்தியில் விநாயகப் பெருமானும் தான்தோன்றீஸ்வரப் பெருமானும் வெளி வீதி வந்தனர்.

இதன்போது விநாயகப் பெருமான் பிள்ளையார் தேரிலும் தான்தோன்றீஸ்வரர் பார்வதி சமேதராய் சித்திரத் தேரிலும் ஏற ஆண்கள் வடம் பிடித்து இழுக்க கால் புதையும் மணல் வீதியில் ஒருவித சத்தத்துடன் ஆடி அசைந்து சென்ற காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.

தேரோட்டத்தினைத் தொடர்ந்து முனைக்காடு வீரபத்திரர் ஆலய வீதியில் திருவேட்டை இடம்பெற்றதுடன் இன்று காலை பெருமானின் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X