2025 மே 19, திங்கட்கிழமை

புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் வருட பெருவிழா

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார், சிஹாரா லத்தீப்


பிரசித்திபெற்ற மட்டக்களப்பு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 205ஆவது வருட பெருவிழா கடந்த 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

திருவிழா நவநாள் காலங்களில் தினமும் மாலை 5.30மணிக்கு திருச்செபமாலை பிராத்தனையும் திருப்பலியும் மறையுரையும் இடம்பெற்று கடந்த  சனிக்கிழமை மாலை அன்னையின் திருப் பவனி இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 அணிக்கு பெருவிழா கூட்டுதிருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு காலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்குத் தந்தை அருட்பணி ஜூலியன் மற்றும் மட்டக்களப்பு மறைக் கோட்ட முதல்வர் அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் சின்ன குருமடத் தந்தை அருட்பணி ஏ.தேவதாசன் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

பெருவிழா நிறைவில் கொடி இறக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கப்பலில் அன்னையின் திருவுருவம் மட்டக்களப்பு வாவியினுடாக பவனியாகக் கொண்டுசெல்லப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X