2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவின் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

நவராத்திரி தினத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் விசேட பூசைகள் இடம்பெற்று வந்தன.

கடந்த 10 தினங்களாக இடம்பெற்றுவந்த ஆலயத்தின் சக்தி விழாவில் தினமும் விசேட பூசைகள் செய்யப்பட்டு அன்னையின் உள் வீதியுலாவும் இடம்பெற்றுவந்தது.

இதன் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் சக்தி மகா யாகம் இடம்பெற்றதுடன் பிற்பகல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சடங்கான நோற்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் சிறப்பு நிகழ்வாக தீமிதிப்பு உற்சவம் நேற்று திங்கட்கிழமை  கோலாகலமாக இடம்பெற்றது.

அன்னைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தீமிதிப்பு உற்சவத்தினை தொடர்ந்து சாட்டைப்பலி கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பத்தினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X