2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பேத்தாழை, ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இடம்பெற்றது.

பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனியானது பாசிக்குடா பிரதான வீதி வழியாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தினை சென்றடைந்து  அங்கிருந்து மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

இதன்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் தலையில் பாற்குடங்களை ஏந்தியவாறு தங்களது நேத்திக்கடன்களை சுவாமிக்கு செலுத்தினார்கள்.

பூசை நிகழ்வுகளை சங்காபிஷேக பிரதமகுரு பிரம்மஸ்ரீ லட்சுமி காந்த ஜெகதீஸ்வரகுருக்கள், ஆலய குரு மு.சன்முகம் குருக்கள் ஆகியோர்கள் நடாத்தினார்கள்.

சங்காபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் ஆலய தலைவர் சா.பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X