2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஐயப்பன் பக்தர்களின் பாதை யாத்திரை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்திலிருந்து ஐயப்பன் பக்தர்கள் இருமுடி ஏந்தியவாறு பாதை யாத்திரை ஒன்றை இன்று (27) மேற்கொண்டுள்ளனர்.

அகில இலங்கை இந்திய சபரிமலை யாத்திரைக்குழு குருசாமி தர்மகத்தா சிவஸ்ரீ கி.ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறுகின்ற இந்த பாதை யாத்திரையானது யாழ்.நகர வீதியூடாக கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தானத்திற்கு சென்றடையவுள்ளது.

இந்திய கேரள சிங்காரி மேளம் முழுங்க தென்னிலங்கையிலிருந்து வரழைக்கப்பட்ட யானையின் மீது ஐயப்பன் திருப்பவனி வருவதுடன் ஐயப்பன் பக்தர்கள் இருமுடி ஏந்தியவாறு பாதையாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

இப்பாத யாத்திரையானது சுவாமி கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தாத்திற்கு சென்றடைந்ததுடன், ஐயப்ப பக்தர்கள் 18 படி ஏறி ஐயப்ப விரதத்தை நிறைவேற்றவுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .