2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பாற்குட பவனி...

Kanagaraj   / 2014 ஜனவரி 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்.


மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திர காளி அம்மன் தேவஸ்த்தான புனவர்த்தன அஸ்டபந்ன நவகுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேக பெருவிழாவினை தொடர்ந்து 48 நாட்;கள் மண்டலாபிஷேக பூசை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி நாள் நிகழ்வாக இன்று காலை சங்காபிஷேக நிகழ்வும் பாற்குட பவனியும் இடம்பெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயாப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பவனியானது கல்குடா வீதி வழியாக ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தினை சென்றடைந்து அங்கிருந்து விபுலானந்த வீதி வழியாக பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்தினை சென்று அங்கிருந்து மீண்டும் பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது.

இதனைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேக பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இவ் நிகழ்வுகளில் தமிழ்தேசிய நாடாளுன்ற உறுப்பினரும் மேற்படி ஆலயத்தின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .