2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}



கொழும்பு, ஆமர்வீதி பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய அறங்காவலர் சபை தலைவர் எம்.நல்லத்தம்பி மற்றும் செயலாளர் தியாகலிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில், உற்சவ குரு சிவாச்சாரியார் ரத்னம் சிவஸ்ரீ சீதாராம பரணீதர குருக்கள் தலைமையில்  ஆரம்பமான இம் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 10 தினங்கள் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 11 ஆம் திகதி தீமிதிப்பு வைபவமும், 12 ஆம் திகதி பாற்குட பவனியும் 14 ஆம் திகதி முத்தேர் பவனியும் 15 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .