2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதி கடற்கரையில் சிவன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆரையம்பதி கடற்கரை எல்லையில் சிவபெருமானின் 'ருத்திர தாண்டவ திருவுருவச் சிலை' எல்லைச் சிவனாக வியாழக்கிழமை (27) நிறுவப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாரும்  ஆற்றல் பேரவைத் தலைவருமான  பூ.பிரசாந்தனின்  சிந்தனையில் ஆற்றல் பேரவை, ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம், ஆரையம்பதி ஸ்ரீவீரம்மாகாளியம்மன்  ஆலய திருப்பணிச்சபை, ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியம் என்பன இணைந்து இச்சிவன் சிலையை நிறுவியுள்ளது. 

பீடம் உட்பட சுமார் 21 அடி உயரமான இச்சிவன் சிலையானது ஆரையம்பதி ஸ்ரீவீரம்மாகாளியம்மன் ஆலயத்திலிருந்து பத்தர்களின் அரோகரா கோஷத்துடன் எடுத்துவரப்பட்டு, விசேட பூஜைகள் மேற்கொண்டு நிறுவப்பட்டது

இதில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர்  பூ.பிரசாந்தன், முச்சக்கரவண்டிச் சங்கத் தலைவர் குகராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X