2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தேர்த்திருவிழா

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா


ஈழத்தில் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று (27) நடைபெற்றது.

நேற்று காலை 09.00 மணிக்கு வசந்தமண்டபப் பூஜைகளுடன் ஆரம்பித்து சிவன் உமாதேவியுடன்  பிள்ளையார் மற்றும் முருகன் தேர்களில் வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த காலயுத்த சூழ்நிலை காரணமாக இந்த ஆலயத்தின் திருவிழா அலங்காரத் திருவிழாவாகவே நடைபெற்று வந்த நிலையில், 3 வருடங்கள் கழித்து இந்த வருடம் முதற் தடவையாக கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.











  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .