2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பொங்கல் பெருவிழா

Kogilavani   / 2014 மே 25 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழாவும் தீமிதிபபும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.
அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.

மதியம் பொங்கல் விழா விசேட பூசைகள் இடம்பெற்று தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வின் விளக்கு வைத்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது.

அத்துடன், இன்றைய பொங்கலுக்காக கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்திலிருந்து பொங்கல் பொருட்கள் சனிக்கிழமை (24) கே.கே.எஸ்.வீதியூடாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இவ் ஆலயத்தின் எட்டாம் மடையும் வைரவர் பொங்கல் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (31)  மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X