2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜோதிலிங்க தரிசனம்

Kanagaraj   / 2014 மே 30 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்


பாரதத்தில் மகிமை வாய்ந்ததாக கருதப்படும் 12 ஜோதி லிங்கங்கள் மட்டக்களப்பிலுள்ள பிரம்ம குமாரிகள் நிலையத்தின் ஏற்பாட்டில், களுவாஞ்சிகுடி தேவாலய வீதியில் உள்ள பிரம்மகுமாரிகள் நிலையத்தில் தரிசனத்துக்காக பொதுமக்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளன.

இவை இன்று வெள்ளிக்கிழமை (30) முதல் மூன்று தினங்களுக்கு தரிசனத்துக்காக வைக்கப்படவுள்ளதாக பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர் லிங்கங்களுக்கும் இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குருக்களினால் இந்த பூசைகள் நடத்தப்பட்டதுடன் விசேட பஜனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X