2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பாற்குடப் பவனி

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,  எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு கீரிமடு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி  சங்காபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை பாற்குடப் பவனி இடம்பெற்றது.

கோட்டைமுனை மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடப் பவனி அரசடி மணிக்கூட்டுச் சந்தி, பார் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ரி.ஜெகநாத சிவாச்சாரியார் தலைமையிலும், சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார், சிவஸ்ரீ.எஸ்.உதயகுமார் சிவாச்சாரியார், சிவஸ்ரீ.ம.சபராஜித சர்மா ஆகியோர் கிரியைகளை நடத்தினர்.

பின்னர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேவேளை, களுவாஞ்சிக்குடி  நாகதம்பிரான்  ஆலயத்தில்  எண்ணெய்க்காப்பு  சாத்தும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (01)  இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X