2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

இதன்போது 10ம் திகதி செவ்வாய்கிழமை பகல் பூசையுடன் பிற்பகல் 2.00 மணிக்கு கல்யாணக் கால் வெட்டும்; வீதி ஊர்வல நிகழ்வு இடம்பெறும். அத்தோடு 11ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கும்பச் சடங்கும், 13ம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருக்குளித்தியாடும் வைபத்துடன் சடங்கு உற்சவம் முடிவடையும். 

இவ்வாலயமானது மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .